Kathir News
Begin typing your search above and press return to search.

"ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு" என கண்ணீருடன் வெங்கட்பிரபு'விற்கு கடிதம் எழுதிய சிம்பு!

ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு என கண்ணீருடன் வெங்கட்பிரபுவிற்கு கடிதம் எழுதிய சிம்பு!

Mohan RajBy : Mohan Raj

  |  11 May 2021 6:30 AM GMT

நேற்று முன்தினம் இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் பிரேம்ஜியின் தாயார் உடல்நல குறைவு காரணமாக இறந்தார், அதற்கு கண்ணீருடன் இரங்கல் கடிதம் எழுதியுள்ளார் நடிகர் சிம்பு.

இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர் பிரேம்ஜியின் தாயாரும், இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவியுமான மணிமேகலை அம்மையார் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இயற்கை எய்தினார். திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இது கொரோனோ காலம் என்பதால் நிறைய பிரபலங்களால் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை.

அந்த வகையில் வெங்கட் பிரபு, பிரேம்ஜியின் நீண்டகால நண்பரான சிம்பு கண்ணீருடன் ஓர் கடிதம் எழுதியுள்ளார்.


அதில், "அன்பு இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நண்பர் பிரேம்ஜி, யுவன் உட்பட என் சகோதரர்களான உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை.. எதையும் சாதாரணமாக எளிமையாக எடுத்துக் கொண்டு செல்பவர்கள் நீங்கள். கடந்த இரண்டு வருடமாக, இதற்கு முன் நட்பாக இணைந்திருந்தாலும். இந்த இரண்டு வருடம் இணைந்து பணிபுரியும் போது எவ்வளவு அழகாக, எளிமையாக, எந்த சூழ்நிலையையும் கடந்து செல்கிறீர்கள் எனப் பார்த்திருக்கிறேன்.

ஆனால், அம்மா மீது மிகுந்த அன்பு கொண்ட உங்களுக்கு இதைக் கடப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதறிவேன். அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று. ஆறுதல் சொல்ல முடியாத ஒரு இழப்பு. அப்பாவிற்கும். குடும்பத்திற்கும், உங்களனைவருடனும், இழப்பையும்... வேதனையையும் பகிர்ந்துகொள்கிறேன். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். கண்ணீருடன் சிலம்பரசன் TR" என குறிப்பிட்டு அக்கடிதம் எழுதியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News