கொரோனோ தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அஜித்'தின் வழிகாட்டுதலின் கீழ் உருவான தக்ஷா குழு!
By : Mohan Raj
அஜித் வழிகாட்டுதலின் பெயரில் உருவான 'தக்ஷா' குழுவினர் கொரோனோ தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரசிகர்களால் செல்லமாக 'தல' என அழைக்கப்படும் அஜித்குமார் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி இதர செயல்களிலும் ஈடுபாடு செலுத்தி வருகிறார். ட்ரோன்'களை வடிவமைப்பது துப்பாக்கி சுடுதல் போன்றவை இவரின் சமீப கால ஈடுபாடு கொண்ட செயல்களாகும். அதில் ட்ரோன் களை வடிவமைப்பது மற்றும் மாற்றியமைப்பதற்காக இவர் வழிகாட்டுதலின் பெயரில் 'தக்ஷா' என்ற பெயரில் ஓர் குழுவை உருவாக்கினார்.
கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் மோசமாகப் பரவி வரும் இந்த நிலையில் கொரோனாவைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது 'தக்ஷா' குழுவும் கொரோனா தடுப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அஜித்தின் வழிகாட்டுதலின் கீழ் 'தக்ஷா' குழு உருவாக்கிய ட்ரோன்கள், கொரோனா பரவும் பகுதிகளில் கிருமிநாசினியை தெளித்து வருகின்றன. இந்தக் குழு தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் ட்ரோன்கள் மூலம் சாலைகளில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். எனவே அரசுக்கு உதவி வரும் 'தக்ஷா' குழுவை மக்கள் பாராட்டி வருகின்றனர்.