ஓடிடியில் வெளியான நயன்தாராவின் புதிய த்ரில்லர் படம்!
By : Mohan Raj
ஓடிடி தளத்தில் வெளியான நயன்தாராவின் த்ரில்லர் படம்.
கொரோனோ உச்சத்தில் இருக்கும் காலகட்டமாக தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராக உள்ள அனைத்து படங்களும் ஓடிடி தளத்தின் மூலமாக வெளியிடுவதை தேர்வு செய்கின்றன. இதனால் படமும் முடங்கி கிடக்காமல், தயாரிப்பாளருக்கும் செலவு கையை கடிக்காமல் படங்களை உடனடியாக ரசிகர்களிடத்தில் கொண்டு செல்ல முடியும் என்பதில் திரையுலகம் தெளிவாக உள்ளது.
அதைபோல் கொரோனோ காலகட்டமாதலால் திரையரங்கிற்கு செல்ல ரசிகர்களும் பயத்துடன் இருப்பதால் ஓடிடி தளத்தில் வீட்டிலேயே படம் பார்ப்பதை விரும்புகின்றனர்.
அந்த வகையில் அடுத்ததாக தமிழின் முதன்மை கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவின் புதிய த்ரில்லர் படம் ஓடிடி'யில் வெளியாக இருக்கிறது.
இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் நிழல், பிரபல படத்தொகுப்பாளரான அப்பு என் பட்டாத்திரி இப்படத்தை இயக்கி இருந்தார். இதில் நடிகர் குஞ்சாக்கோ போபன் நாயகனாக நடித்திருந்தார்.
திரில்லர் படமான இது, கடந்த மாதம் 9-ந் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், இரண்டே வாரங்களில் தியேட்டர்களில் இருந்து எடுக்கப்பட்டது. இதனால் இப்படத்தை ஓடிடி'யில் வெளியிட முடிவு செய்துள்ள படக்குழு, தற்போது அதன் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மே 11-ந் தேதி 'நிழல்' படம் ஓடிடி-யில் வெளியாகியுள்ளது.