கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இணையும் அடுத்த பிரபல ஹீரோ!
By : Mohan Raj
கே.ஜி.எஃப் எனும் பெரும் வெற்றி படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.
கே.ஜி.எப் எனும் மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். அடுத்ததாக கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக இயக்கி முடித்துள்ள இவர், தற்போது பிரபாஸை வைத்து 'சலார்' எனும் படத்தை இயக்கி வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சிறிது பாக்கியுள்ள நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் படப்பிடிப்பு துவங்கப்பட்டால் மீதமுள்ள சிறு பகுதியும் முடிக்கப்பட்டுவிடும் என தெரிகிறது.
இந்நிலையில், சலார் படத்தை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்க உள்ள புதிய படத்தில், ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். சமீபத்திய பேட்டியில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தெலுங்கு திரையுகில் ஆக்சன் கதைகளுக்கே அதிக முக்கியத்தும் தரப்படும் அதில் ஜூனியர் என்.டி.ஆர் முக்கியமான கதாநாயகன்.
இந்த நிலையில் கே.ஜி.எஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இணையும் போது கண்டிப்பாக இந்திய அளவில் அது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என தெரிகிறது.