இந்தி திரையுலகில் காலடி எடுத்து வைக்கப்போகும் சாய் பல்லவி!
By : Mohan Raj
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள சாய் பல்லவி இன்றைய இளம் கதாநாயகிகளில் முக்கியமானவர். இவர் அடுத்ததாக இந்தி படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை சாய் பல்லவி, பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் தியா, மாரி 2 போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விராட பருவம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2005ம் ஆண்டு தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ரேயா நடிப்பில் வெளியான 'சத்ரபதி' என்ற படத்தை தற்போது இந்தியில் ரீ-மேக் செய்ய உள்ளனர். இதில் நாயகனாக தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிக்க, வி.வி.விநாயக் இயக்க உள்ளார்.
இந்தப் படத்தில் சாய் பல்லவியை நாயகியாக நடிக்க வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். இதற்கு சாய் பல்லவி ஒப்புக்கொண்டால் தென் திரையுலகில் இருந்து ஹிந்திக்கு செல்லும் அடுத்து முக்கியமான கதாநாயகியாக சாய் பல்லவி விளங்குவார் என தெரிகிறது.