Kathir News
Begin typing your search above and press return to search.

'கோ' படத்தில் சிம்பு நடித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் - சிம்பு கைவிட்ட முக்கிய படம்!

கோ படத்தில் சிம்பு நடித்த புகைப்படங்கள்  இணையத்தில் வைரல் - சிம்பு கைவிட்ட முக்கிய படம்!

Mohan RajBy : Mohan Raj

  |  13 May 2021 11:15 AM GMT

நடிகர் சிம்பு நடிக்கவிருந்த கோ திரைப்படத்தின் ஸ்டில்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி சிம்பு ரசிகர்களால் அதிகம் பகிரப்படுகிறது.

சிறு வயதில் இருந்தே திரையுலகில் நடித்து வருபவர் நடிகர் சிம்பு, இவர் இயற்பெயரான சிலம்பரசன் எனும் பெயரில் சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார். வளர்ந்து பெரியவர் ஆனதும் கதாநாயகனாகிவிட்டார். அவரின் முதல் படம் தன் தந்தை டி.ராஜேந்திரின் இயக்கத்தில் 'காதல் அழிவதில்லை'.

பின் நிறை படங்கள் நடித்திருந்தாலும், இவர் நடிக்காமல் விட்ட படங்களும் அதிகம். பல்வேறு காரணங்களால் இவர் நடிக்க வேண்டிய பல முக்கிய படங்கள் வேறு கதாநாயகர்களுக்கு சென்றுள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியாகி மிகுந்த வெற்றியடைந்த படம் 'கோ', அரசியலையும், ஊடக உலகையும் இணைத்து பிண்ணப்பட்ட கதை பின்னணியில் இப்படம் பெரும் வெற்றியடைந்தது. இப்படத்தில் கதாநாயகன் ஜீவா.


இந்த கதையில் முதலில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டது சிம்பு'தான். போட்டோ ஷூட் எடுக்கப்பட்டு சில காட்சிகள் ஷூட் செய்யப்பட்ட பிறகு பல்வேறு காரணங்களால் சிம்புவால் நடிக்க இயலவில்லை. பின்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகர் ஜூவா.


இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்து சிம்பு நடித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளன. இவை தற்பொழுது சிம்பு ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News