Kathir News
Begin typing your search above and press return to search.

"அரசியல் வேண்டாம் சார், சினிமாவிற்கு வாருங்கள்" கமல்ஹாசனுக்கு வேண்டுகோள் விடுக்கும் பிரபல இயக்குனர்!

அரசியல் வேண்டாம் சார், சினிமாவிற்கு வாருங்கள் கமல்ஹாசனுக்கு வேண்டுகோள் விடுக்கும் பிரபல இயக்குனர்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  15 May 2021 10:00 AM IST

"அரசியலை தூர எறிந்துவிட்டு கலை பயணத்தை தொடருங்கள்" என பிரபல இயக்குனர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த தமிழக சட்டசபை தேர்தலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் தோல்வியை தழுவினார் கமல்ஹாசன். அவரது கட்சி சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியை தழுவினர். இதனையடுத்து நிர்வாகிகள் அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக வெவ்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.


இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், அரசியலை தூக்கி எறிந்துவிட்டு சினிமா பயணத்தை தொடருமாறு திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கமல் சார். சினிமாவில் நீங்க ஒரு வரலாறு. அதையே தொடருங்கள். கொள்கை தெளிவில்லாத அரசியல் இப்படித்தான் இருக்கும். அரசியலை தூக்கி எறிந்துவிட்டு கலை பயணத்தை தொடருங்கள். சென்னையில் ஒரு மாபெரும் படப்பிடிப்பு தளம் இல்லை. இதற்காக போரடுங்கள். இதை செய்தாலே வரலாறு பேசும் உங்களை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News