சிம்பு படத்தை வெளியிட தடை கேட்டு இயக்குனர் வழக்கு!
By : Mohan Raj
சிம்பு படத்திற்கு தடை கேட்டு இயக்குனர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடிகர் சிம்பு சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் சில படங்கள் நடிப்பதாக முடிவாகி பின் சில காரணங்களுக்காக படம் முடிவடையாமல் நின்று போனது. அப்படி நின்று போன படங்களில் ஒன்றுதான் சிம்பு, ஹன்சிகா நடிப்பில் இயக்குனர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவனது 'மஹா' திரைப்படம்.
இந்தப்படம் தற்பொழுது ஓடிடி தளத்தில் ரிலீஸாக தயாராக உள்ளது. இந்த நிலையில் தனக்கு தெரியாமல் படத்தை முடித்து, ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முயற்சிகள் நடப்பதாகவும், படத்தை வெளியிட தடை கோரியும் இயக்குனர் யு.ஆர்.ஜமீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, "படத்தை இயக்க தனக்கு 24 லட்சம் ரூபாய் ஊதியம் தருவதாக ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம், இதுவரை 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தந்துள்ளதால், மீதமுள்ள 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மே 19-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.