தனுஷ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
By : Mohan Raj
'அண்ணாத்த' படம் முடித்த பிறகு தனுஷ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் 'அண்ணாத்த'. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முழுவதும் முடிந்த நிலையில் இதற்காக ஒரு மாத காலமாக ஐதராபாத்தில் தங்கி இருந்த ரஜினிகாந்த், சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார்.
விரைவில் இதற்கான டப்பிங் வேலைகளை முடித்துகொண்டு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார்.
இதனையடுத்து அவர் அடுத்த படமாக தனது மருகன் தனுஷ் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என தெரிகிறது.