Kathir News
Begin typing your search above and press return to search.

சிம்புவை நிலை குலைய வைத்த நண்பரின் மரணம் - கண்ணீருடன் சிம்பு கடிதம்!

சிம்புவை நிலை குலைய வைத்த நண்பரின் மரணம் - கண்ணீருடன் சிம்பு கடிதம்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  16 May 2021 3:45 PM IST

நடிகர் சிம்புவை அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்த குட்லக் சதீஷ் என்பவரது மரணம் நிலைகுலைய வைத்துள்ளது, மேலும் அவர் கண்ணீருடன் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனோ இரண்டாம் அலை நாட்டு மக்களை தீவிரமாக தாக்கி வரும் நிலையில் உயிரிழப்பு அதிகமாகிகொண்டே வருகிறது. திரையிலகை சேர்ந்த பலர் கொரோனோ தாக்கத்தால் பலியாகி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு'வின் நண்பரும், அவருடன் மன்ற பணிகளை கவனித்து வந்தவருமான குட்லக் சதீஷ்என்பவர் கொரோனோ'வால் மரணமடைந்தார்.

இவர் மறைவு சிம்புவை நிலைகுலைய வைத்துள்ளது. மேலும் இதற்காக சிம்பு கண்ணீருடன் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், "அன்பு தம்பியும் 'காதல் அழிவதில்லை' படத்திலிருந்து என்னோடு கூட இருந்து வரும் சகோதரருமான குட்லக் சதீஷை காலத்தில் இழந்திருக்கின்றேன் கொரோனா என்றவுடன் மருத்துவ உதவிக்கு எல்லாம் பேசி நம்பிக்கையோடு மீண்டு வருவார் என்று ஆறுதல் சொல்லி மருத்துவமனைக்கு அனுப்பினேன். அங்கு எடுத்துப் போகும் உடல்களை பார்த்து பயந்தது ஏன் சகோதரா? பயந்து உன் இதயத் துடிப்பை நிறுத்திக் கொண்டது ஏன் சகோதரா?

எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை வைக்காமல் போனது ஏன் சகோதரரா? துயர் கொள்கிறேன். உன்னை இழந்துவிட்டதை நம்ப முடியாமல் தவிக்கின்றேன். உன் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் தவிக்கின்றேன். நீ செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி அவசரப்பட்டு விட்டாய், போய் வா சகோதரா, அழுகையுடன் வழி அனுப்பி வைக்கிறேன்.






ரசிகர்களே, நண்பர்களே, சகோதர சகோதரிகளே, நோய்வாய்ப்பட்டால் தயவுசெய்து நிலை குலையாதீர்கள். பயம் நம்மை வீழ்த்துகிறது. பயம் தான் நாம் நோயிலிருந்து குணமாக தடுக்கிறது. சாதாரண நோயைத் தீவிரமாக்குவதும் பயம்தான் நிலைகுலைதல் இதயத்தை தாக்குகிறது. தயவுசெய்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையில் மருத்துவம் செய்து கொள்வோம்

நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள், அதேசமயம் மன திடத்தையும் பெருக்கிக் கொள்வோம். தேவையான மருந்துகள் எடுத்து கொள்வ்தோடு அல்லாமல் தேவையற்று வெளியே செல்வதை தவிர்க்கவும்.

இழப்புகள் தாங்க முடியாததாக இருக்கிறது, பாதுகாப்பாக இருப்பதே கொரோனாவை விரட்டும் மருந்து என புரிந்து கொள்வோம். சகோதரன் குட்லக் சதீஷை இழந்தது போல் இன்னொருமுறை இழக்க விரும்பவில்லை" இவ்வாறு சிம்பு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News