புயல் பாதிப்புகள் மத்தியில் ஃபோட்டோ ஷூட் எடுத்த நடிகை - குவியும் கண்டனங்கள்!

By : Mohan Raj
புயல் பாதிப்புக்கு மத்தியில் புகைப்படங்கள் எடுத்த நடிகை தீபிகா சிங்கிற்கு இணையத்தில் நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அரபிக்கடலில் உருவான 'டவ்தே' புயல் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு குஜராத்தில் கரையை கடந்தது. புயல் காரணமாக மராட்டியத்தில் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையான சேதங்களை சந்தித்தன. அந்த மாவட்டங்களில் 12 பேரின் உயிரை இந்த புயல் பறித்தது. இந்த புயல் காரணமாக நாட்டின் நிதி தலைநகர் மும்பையில் சூறைக்காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது.
இதற்கிடையில் 'டவ்தே' புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே நடனமாடியும், புகைப்படங்கள் எடுத்தும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய நடிகை தீபிகா சிங்கிற்கு சமூகதளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
"புயலை நாம் தடுத்த நிறுத்த முடியாது. அதுவாகவே கடந்து போகும்" என்றும் நடிகை தீபிகா சிங் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
