இவருக்கு அவர் அக்காவா? ஜோதிகா முடிவால் அதிர்ச்சி!

தென்னிந்தியாவின் பிரபல கதாநாயகன் பிரபாஸுக்கு ஜோதிகா அக்காவாக நடிக்கிறார் என்று சமூக வலைதளத்தில் உலாவிய தகவலை பற்றிய உண்மை வெளிவந்துள்ளது.
தமிழில் 90-களின் இறுதியில் அறிமுகமான கதாநாயகி ஜோதிகா. முதல் படமான வாலியில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருப்பார். பின்னர் சில படங்களில் நடித்தபின் தமிழின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரானார். தமிழில் இருக்கும் அனைத்து முன்னணி கதாநாயகர்கள் உடனும் ஜோடியாக நடித்தார்.
பின்னர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னும் சில படங்களில் நடித்தார். இந்த நிலையில் தற்போது பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடித்து வரும் 'சலார்' என்ற திரைப்படத்தில் பிரபாஸ் சகோதரியாக ஜோதிகா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஜோதிகா இந்த படத்தில் பிரபாஸ் சகோதரியாக நடிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்து வந்தன.
அந்த வகையில் கோடம்பத்தில் கசிந்த தகவலின் படி, ஜோதிகா பிரபாஸுக்கு ஜோடியாக எந்த படத்திலும்நடிக்க வில்லை என கூறுகிறார்கள். கொரோனோ காலமாக இருப்பதால் பொரும்பாலும் எந்த ஒரு புதுப்படங்களும் நடிகர், நடிகைகள் ஒப்பந்தமாக தயங்குகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகின.