இசையமைப்பாளர் இமான் வீட்டில் நடந்த சோகம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
By : Mohan Raj
இசையமைப்பாளர் டி.இமான் அவர்களின் வீட்டில் நடந்த சோகம் அவரது ரசிகர்களையும், அவரது திரையுலக நண்பர்களையும் கண் கலங்க வைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்களில் இமான் அவர்களும் ஒருவராவார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வருகிறார். தற்பொழுது சூப்பர் ஸ்டார் நடிக்கும் 'அண்ணாத்த' படத்திற்கு இசையமைத்து வருகிறார். கணிசமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர் இவர்.
தன்னுடைய இனிமையான இசையால் பல ரசிகர்கள் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட இசையமைப்பாளர் டி.இமானின் தாயார் இன்று உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது டிவிட்டர் பதிவில் இமான் கூறியுள்ளதாவது... "மே 23 மூன்றாம் தேதி, தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய தன்னுடைய தாயார், இன்று உயிரிழந்துள்ளார். கோமாவில் இருந்த தன்னுடைய தாயாருக்கு மருத்துவமனையில், ICU-வில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தருணங்களையும் பகிர்ந்துக்கொண்டு, உணர்வு பூர்வமான வார்த்தைகளை வெளிப்படுத்தி இப்படிக்கு உங்களுடைய ஒரே மகன் இமான்" என பதிவிட்டுள்ளார்.
இவரது இந்த பதிவிற்கு, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.