கொரோனோ நோயாளிகளுக்கு உதவ தொண்டு நிறுவனம் துவங்கிய நிதி அகர்வால்!

நடிகை நிதி அகர்வால் நோயாளிகளுக்காக தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் உதவிய செய்ய இருக்கிறார்.
தற்பொழுது கொரோனோ இரண்டாம் அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் நடிகர், நடிகைகள் பல்வேறு நிவாரணங்களை அரசின் மூலமும், தன்னார்வலர்களின் மூலமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்த நிலையில் சிம்புவுடன் ஈஸ்வரன், ஜெயம் ரவியுடன் பூமி படங்களில் நடித்த நிதி அகர்வால் தற்போது தெலுங்கில் பவன் கல்யாணுடன் ஹரி ஹர வீர மல்லு என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் தொண்டு நிறுவனம் ஒன்றை துவங்கவுள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காகவே 'டிஸ்டிரிப்யூட் லவ்' என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கி உள்ளார். இதில் ஒரு குழுவை நியமித்து எந்தெந்த பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறது என்பதை அறிந்து உடனுக்குடன் இந்த நிறுவனத்தின் மூலம் உதவி செய்யப் இருக்கிறார் நிதி அகர்வால்.