மாநாடு படத்தின் பாடல் வெளியீடு பற்றி சுவாரசிய தகவல்..!
By : Mohan Raj
மாநாடு படத்தின் பாடல் வெளியீடு பற்றி படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து S.J.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளனர். V ஹவுஸ் புரொடக்சன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ரம்ஜான் அன்று வெளியாக வேண்டிய இதன் பாடல் இயக்குனர் வெங்கட் பிரபு'வின் தாயார் மறைவால் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தற்போது இப்படத்தின் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், "பேரிடர் காலத்தில் தினமும் ஏதாவது இறப்பு செய்தி காதில் விழுந்துகொண்டே இருக்கிறது. யாரும் கொண்டாட்ட மனநிலையில் இல்லை. மருத்துவமனை வாசலிலும் கொரோனா பயத்திலும் இருக்கும் இச்சூழலில் இரக்கமற்று மாநாடு படத்தின் சிங்கிள் வெளியிடுவது மனித மற்ற செயலாக இருக்கும். லாக்டௌன் முடியட்டும் கொஞ்சமாவது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பட்டும் நண்பர்களே அதுவரைக்கும் மற்றவர்களுக்காக வேண்டியபடி காத்திருங்கள்" என பதிவிட்டுள்ளார்.