இயக்குனர் வெங்கட் பிரபுவின் பத்தாவது படைப்பு!
By : Mohan Raj
வெங்கட்பிரபுவின் பத்தாவது படம் பற்றிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராக கடந்த பத்து ஆண்டுகளுக்குள் வளர்ந்து நிற்கும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்பொழுது சிம்பு நடிக்க 'மாநாடு' படத்தை முடித்துள்ள இயக்குனர் வெங்கட்பிரபு அடுத்த பட வேலைகளில இறங்கி விட்டார்.
இதுவரை 9 திரைப்படங்களை இயக்கியுள்ள இயக்குனர் வெங்கட் பிரபுவின் 10-வது திரைப்படமான அடுத்த திரைப்படத்தை பற்றிய அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
#VP10 A Venkat Prabhu QUICKIE என குறிப்பிட்டு இயக்குனர் வெங்கட்பிரபு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எனவே விரைவில் இத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.