பிரம்மாண்ட சினிமாவாக உருவாக இருக்கும் "வீர் சாவர்க்கர்" வாழ்க்கை..!
By : Mohan Raj
இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளில் முக்கியமான வீர் சாவர்கர் வரலாறு சினிமாவாக உருவாக இருக்கிறது.
இன்று ஆலமரமாய் வளர்ந்திருக்கும் இந்து மகாசபையை உருவாக்கிய இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளில் முக்கியமானவர் வீர் சாவர்கர். ஆங்கிலேயர்களை மிக கடுமையாக எதிர்த்ததால் 50 ஆண்டுகளை சிறையிலேயே கழித்தவர். ஆங்கிலேயர்களின் தலைநகரான லண்டனிலேயே அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்.
அவரது 138'வது பிறந்த நாளான நேற்று அவரது வாழ்க்கை வரலாறு சினிமாவாக தயாரிக்கப்பட இருக்கிறது என முறைப்படி அறிவிக்கப்பட்டது. மகேஷ் மஞ்சரேகர் இயக்கும் இப்படத்திற்கு "ஸ்வதந்த்ர வீர் சாவர்க்கர்" என்று பெயரிடப்பட்டுள்ளது. சந்தீப் சிங் மற்றும் அமித் பி.வாத்வானி இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். ரிஷி வீர்மணி மற்றும் மகேஷ் மஞ்சரேகர் இணைந்து திரைக்கதை எழுதுகின்றனர்.
பல வரலாற்று சம்பவங்கள் சினிமாவாக உருப்பெற்று ரசிகர்கள் மத்தியில் வீர் சவார்க்கர் வரலாறு சினிமா'வாக உருப்பெறுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.