Kathir News
Begin typing your search above and press return to search.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற நயன்தாரா தயாரித்த திரைப்படம்..!

சர்வதேச அங்கீகாரம் பெற்ற நயன்தாரா தயாரித்த திரைப்படம்..!

Mohan RajBy : Mohan Raj

  |  30 May 2021 7:00 AM GMT

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த கூழாங்கல் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்ட்டட் ஜோடியான விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்த திரைப்படம் "கூழாங்கல்". இயக்குனர் P.S.வினோத் ராஜ் கூழாங்கல் திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு இத்திரைப்படம் 'ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழா'வில் திரையிடப்பட்டு சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது.'MOLODIST KYIV' சர்வதேச திரைப்பட விழா மே 29-ஆம் தேதி முதல் ஜூன் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் தமிழ் சினிமாவின் பெருமையை சர்வதேச அரங்கில் உரக்கச் சொல்லும் வகையில் கூழாங்கல் திரைப்படம் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக பேச்சு வார்தைகள் நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன. பேச்சுவார்த்தை முடிவாகும் பட்சத்தில் இப்படம் வெளியாகும் என தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News