பவன் கல்யாணின் "ஹரிஹர வீர மல்லு" குறித்த முக்கிய செய்தியை வெளியிட்ட தயாரிப்பாளர்!

பவன் கல்யாணின் பிரம்மாண்ட படமான ஹரிஹர வீர மல்லு குறித்து அதன் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தகவல் வெளியிட்டுள்ளார்.
தமிழில் நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அதன் தெலுங்கு உரிமையை பவன் கல்யாண் வாங்கி நடித்து வெளியிட்டிருந்தார். இதனையடுத்து தனது வெற்றி தயாரிப்பாளர் கூட்டணியான ஏ.எம்.ரத்னத்துடன் இணைந்து ஹரிஹர வீர மல்லு என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டே பூஜை போடப்பட்ட படத்தின் பணிகள் பற்றிய அறிவிப்பு ஏதும் வெளியாகாமல் இருந்த நிலையில் இப்படம் குறித்து பவன் கல்யாண் ரசிகர்கள் "படம் வெளிவருமா?" என்கிற ரீதியில் சந்தேகம் கொள்ள துவங்கிவிட்டனர்.
இந்ந நிலையில் ரசிகர்களின் சந்தேகத்தை போக்கும் விதமாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், "இந்தப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 50 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், கொரோனா இரண்டாவது அலை காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நிலைமை சரியான பின்னர் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும்" என்வும் கூறியுள்ளார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.