கொரோனோ காரணமாக தள்ளிப்போகும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா!

By : Mohan Raj
கொரோனோ தொற்று காரணமாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது
அயல்நாட்டு திரையுலகில் உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருதாகும், தன் வாழ்நாளில் இந்த விருதை ஒருமுறையாவது வாங்கிவிட வேண்டும் என கனவு காணாத ஹாலிவுட் திரைப்பிரபலங்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட உயரிய விருது வழங்கும் விழா கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனோ பரவல் காரணமாக உரிய காலத்தில் நடத்தப்பட முடியவில்லை. 2020ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி நடந்தது.
2021'ம் ஆண்டுக்கான 94'வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2022'ம் ஆண்டு பிப்ரவரி 27'ம் தேதி நடக்கும் என்று ஆஸ்கர் விருது கமிட்டி அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா தொற்றின் 2'வது அலை நீட்டித்துக் கொண்டே செல்வதால் தற்போது 2022'ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கும் என்று அறிவித்துள்ளது.
விழாவில் கலந்து கொள்ள விரும்பும் படங்களின் பரிசீலனை டிசம்பர் 31ம் தேதி வரை நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
