'தப்பு ஒன்னுதான்! சிறுசு, பெருசு அளவெல்லாம் கிடையாது' - பட்டாசாக வெடிக்கும் 'ஜகமே தந்திரம்' ட்ரைலர்!

"தப்பு ஒன்னுதான் பெருசு, சிறுசு'ன்னு அளவெல்லாம் கிடையாது" என்கிற வசனத்துடன் பட்டாசாக வெளிவந்துள்ளது தனுஷின் ஜகமே தந்திரம் ட்ரைலர்.
Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள படம் "ஜகமே தந்திரம்".
வரும் ஜூன் 18'ம் தேதி 'நெட் ப்ளிக்ஸ்' ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லர் இன்று காலை 10 மணிக்கு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பெரும்பாலான காட்சிகள் லண்டன் நகரத்தில் படமாக்கப்பட்டிருப்பதும், சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையும் படத்திற்கு பலமாக தெரிகின்றன. "தப்பெல்லாம் ஒன்னுதான் பெருசு, சிறுசு'ன்னு அளவெல்லாம் கிடையாது" என்பது போன்று ஆங்காங்கே வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.
கொரோனோ இரண்டாம் அலை காரணமாக ஓ.டி.டி தளத்தில் இப்படம் வெளியாவதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.