யூட்யூபில் எகிறிய "ஜகமே தந்திரம்" ஹிட்ஸ் - தொடரும் தனுஷ் ரெக்கார்ட்ஸ்!
By : Mohan Raj
தமிழ் சினிமாவில் யூ ட்யூப் ஹிட்ஸ் என்றால் அது தனுஷ் தான். அதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், நேற்று காலை வெளியான நிலையில் 24 மணி நேரத்திற்கு முன்பாகவே, சுமார் 40 லட்சம் ரசிகர்களுக்கு மேல் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓ.டி.டி'யில் மொத்தம் 17 மொழிகளில் ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர், நேற்று காலை 10 மணியளவில் வெளியான நிலையில் 24 மணி நேரத்திற்கு முன்பாகவே, சுமார் 40 லட்சம் ரசிகர்களுக்கு மேல் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.
வரும் 18-ஆம் தேதி ஓ.டி.டி தளமாகிய நெட்ப்ளிக்ஸில் வெளியாகயுள்ள நிலையில் நேற்று காலை வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக "தப்பு பண்றோம் அவ்வளவு தான். சின்ன தப்பு, பெரிய தப்பு எல்லாம் கிடையாது" என்ற வசனமும் "சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா" என்று தனுஷ் கெத்தாக பேசும் வசனமும் போன்ற தனித்துவமான வசனங்களுக்கு கிடைத்த வரவேற்பாகவே இது பார்க்கப்படுகிறது.
ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.