கொரோனோ நிவாரண உதவிகள் செய்யும் விஜய் பட நாயகி - குவியும் பாராட்டுக்கள்!
By : Mohan Raj
நடிகை பூஜா ஹெக்டே 100 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பொருள்களை நிவாரணமாக வழங்கி உதவியுள்ளார்.
கொரோனோ இரண்டாம் அலையால் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருப்பதால் அனைத்து தரப்பினரும் வருமானம், சாப்பாடு போன்ற அடிப்படை தேவைகளுக்கு சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கருணை உள்ளம் கொண்ட அனைவரும் உதவி வருகின்றனர். அந்த வகையில் விஜயின் 'தளபதி 65' பட நாயகி பூஜா ஹெக்டே ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
தமிழில் முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் பூஜா ஹெக்டே, இவர் தற்பொழுது விஜய்க்கு ஜோடியாக 'தளபதி 65' படத்தில் நடித்து வருகிறார். இவர் தற்பொழுது கொரோனோ ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த 100 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருள்களை நிவாரணமாக வழங்கியுள்ளார். இதனால் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.