விஷ்ணுவர்தன், யுவன் சங்கர் ராஜா கூட்டணி முறிவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
By : Mohan Raj
விஷ்ணுவர்தன் புதிய படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் இல்லை அதற்கு பதிலாக வேறு ஒரு இசையமைப்பாளர் இசையமைக்க போகிறார்.
தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் கூட்டணி புகழ்பெற்றது. அதில் குறிப்பிடத்தகுந்தது யுவன் சங்கர் ராஜா மற்றும் விஷ்ணுவர்தன் கூட்டணி. நல்ல பாடல்களையும், சிறந்த ஆல்பம்'களையும் இந்த இருவரின் கூட்டணி ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளது. குறிப்பாக அறிந்தும் அறியாமலும், பில்லா, சர்வம், ஆரம்பம் போன் படங்கள் இந்த படங்கள் பாடல்கள், பின்னணி இசை போன்ற அனைத்திலும் இந்த கூட்டணியின் ஈடுபாடு மற்றும் உழைப்பு தெரியும்.
ஆனால் விஷ்ணுவர்தனின் அடுத்த படத்தில் இந்த கூட்டணி உடைகிறது. இயக்குனர் விஷ்ணுவர்தன் நடிகர் அதர்வா'வின் சகோதரர் ஆகாஷ் கதாநாயகனாக வைத்து எடுக்கும் புதிய படத்தில் ஜிப்ரான் இசையமைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.