ஊரடங்கு சமயத்தில் திடீரென இயக்குனரை ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை!
By : Mohan Raj
பிரபல நடிகை திடீரென இயக்குனர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, ஹிந்தி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை யாமி கவுதம், பிரபல இயக்குனர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவருடன் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், இருவரும் திடீர் என திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
இவர் பல விளம்பரப்படங்களில் மாடலாக நடித்து பிரபலமான யாமி கெளதம், தமிழில் 'கெளரவம்' மற்றும் 'தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் உரி, சர்ஜிகல் ஸ்ட்ரைக் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதித்யா தர் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசு எழுந்தது.
இந்நிலையில், இவர்களுக்கு நேற்று திடீர் என திருமணம் நடந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டும், இரு தரப்பு நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டுள்ளனர். இதுகுறித்து நடிகை யாமி கவுதம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படத்தை வெளியிட்டு, "எங்கள் குடும்பத்தினர் ஆசீர்வாதத்துடன், இன்று எங்கள் திருமணம் நடந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தை எங்கள் குடும்பத்துடன் கொண்டாடினோம்" என குறிப்பிட்டுள்ளார்.