ஜகமே தந்திரம் இரண்டாம் பாகம் பற்றி தனுஷ் கூறிய தகவல்!

"இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை 'ஜகமே தந்திரம்' 2'ம் பாகம் எடுக்க தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்" என தனுஷ் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஜகமே தந்திரம்'. இப்படம் ஜூன் 18 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஜகமே தந்திரம் படக்குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸில் உரையாடினர்.
அந்த உரையாடலின் போது நடிகர் தனுஷ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "ஜகமே தந்திரம் படத்தின் வெளியீட்டுக்காக ரொம்ப நாளாக காத்துக் கொண்டு இருக்கிறோம். கடைசியாக இப்படம் மக்களிடம் போய் சேர இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நடித்த சுருளி கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை ஜகமே தந்திரம் 2ஆம் பாகம் எடுக்க தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். அந்த அளவிற்கு சுருளி கதாபாத்திரம் ரொம்ப பிடித்திருக்கிறது" என்றார்.