தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!

By : Mohan Raj
தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
தமிழ் சினிமாவின் தற்போதைய முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ், தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, ஆங்கிலம் என பிற மொழி படங்களிலும் முத்திரை பதிக்கும் விதமாக அவ்வபோது கதையம்சம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபமாக 'தி க்ரே மேன்' என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் இப்படத்தை இயக்குகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக பிப்ரவரி மாதம் தனது குடும்பத்தாருடன் அமெரிக்கா சென்றார் தனுஷ். படத்தின் முழு படப்பிடிப்பையும் முடிக்கும் வரை அவர் அமெரிக்காவிலேயே தங்கியிருந்து முடித்துக் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
இனி தமிழகம் திரும்பியவுடன் அடுத்தடுத்த தனது படைப்புகளில் கவனம் செலுத்துவார் என தனுஷ் தரப்பு தெரிவித்துள்ளது.
