மாநாடு படத்தின் இசை உரிமையை வாங்கிய பிரபல இசையமைப்பாளரின் நிறுவனம்!
By : Mohan Raj
மாநாடு திரைப்படத்தின் இசை உரிமையை யுவன் சங்கர் ராஜாவின் 'யு1 ரெக்கார்ட்ஸ்' நிறுவனம் வாங்கியுள்ளது.
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசைமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு', முதல் முதலாக சிம்பு'வுடன் வெங்கட்பிரபு கூட்டணி சேருவதாலும், யுவன் இசை என்பதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த படத்தின் இசை பற்றிய முக்கிய அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், "மாநாடு, படத்தின் இசை உரிமையை யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் வாங்கியுள்ளது. முதல் சிங்கிள் எந்தத் தேதியில் எத்தனை மணிக்கு வெளியாகும் என்பதை புதன்கிழமை லிட்டில் மேஸ்ட்ரோ அறிவிப்பார்"என பதிவிட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவனும் விரைவில் சிங்கிள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனக் கூறியிருந்த நிலையில் தயாரிப்பாளரும் அதிகாரப்பூர்வமாக நாளை அதன் அப்டேட் வெளியாகும் என தெரிவித்துள்ளது சிம்பு ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது.