Begin typing your search above and press return to search.
தாராள மனதுடன் நன்கொடை அளித்த இளம் நடிகை!

By :
நடிகை நிதி அகர்வால் கொரோனோ நிதியாக ரூ.1 லட்சம் தமிழக அரசுக்கு நன்கொடை அளித்துள்ளார்.
தமிழில் பிரபலமான இளம் கதாநாயகி நிதி அகர்வால், இவர் சிம்பு-வுடன் ஈஸ்வரன், ஜெயம் ரவியுடன் பூமி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்பொழுது கொரோனோ நிவாரண நிதியாக ரூ.1லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
இதனை தனது ட்விட்டர் பதிவில் அவர், "கொரோனோ தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கத்திற்கு உதவுவதற்காக நான் அரசுக்கு ரூ .1 லட்சம் நன்கொடை அளித்துள்ளேன். இந்த கடினமான காலங்களில் எல்லாவற்றிலும் இருந்தும் மீண்டுவரவும் எங்களுடன் இருக்கும் எங்கள் சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்னணி வீரர்களுக்கு நன்றி. கடினமான நேரங்களை மனதில் வைத்து அரசாங்கத்திற்கு இது எனது சிறிய பங்களிப்பாகும்" என பதிவிட்டுள்ளார்.
Next Story