அடுத்ததாக நெட்ஃபிளிக்ஸ் வெப்தொடரில் களமிறங்கும் சமந்தா!

By : Mohan Raj
'தி ஃபேமிலி மேன் 2' பெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து அடுத்ததாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு ஒரு வெப் தொடர் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் நடிகை சமந்தா.
சமீபத்தில் கடும் சர்ச்சைகள் மத்தியில் வெளியாகி பிறகு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற வேப் தொடர் 'தி பேமிலி மேன் 2' இதில் இலங்கை தமிழ் போராளியாக, தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தயாராகும் ஒரு பயிற்சி பெற்ற போராளி வேடத்தில் சமந்தா நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. திரைப்பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு வெப் தொடரில் சமந்தாவை ஒப்பந்தம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
