"எந்த ஷாட்டா இருந்தாலும் சிங்கிள் டேக்-தான், பிரமிப்பா இருக்கு" - சிம்புவின் கம்பேக் பற்றி புகழும் தயாரிப்பாளர்!

படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார், ஒத்துழைப்பு இருக்காது, இயக்குனருடன் மோதல் வரும் என நடிகர் சிம்பு'வின் மேல் கூறப்பட்டு வந்த அனைத்து புகார்களையும் உடைத்து தற்பொழுது புதிய சிம்பு'வாக உருவெடுத்துள்ளதாக 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கமளித்துள்ளார்.
ஒரு தனியார் பத்திரிக்கைக்கு அவர் மாநாடு படம் பற்றி பேசும் பொழுது கூறியதாவது, "படப்பிடிப்பு ஆரம்பிச்சதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் சிம்பு'வோட ஈடுபாடு பிரமிக்க வைக்குது. எந்த ஷாட்டா இருந்தாலும் சிங்கிள் டேக்தான். ஒரு சீன் அஞ்சு நிமிஷம் பதினாலு செகண்ட். அதை ஒரே டேக்கில் சிம்பு நடிச்சு அசத்தினார்.
சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. ஆனா, நான் சொல்றது நிஜம். காலையில ஆறு மணிக்கு படப்பிடிப்புனா, ஆறு மணிக்கு ஷூட்டுக்கு வந்திடுறார். மதியம் லன்ச்சுக்கு மட்டும்தான் பிரேக். திரும்பவும் சரியான டைமுக்கு 'ஷாட் போலாமா'னு வந்து நிப்பார். அந்தளவுக்கு இன்வால்மென்ட் அவர்கிட்ட உண்டு. கேரவனுக்கு அதிகம் போறதில்ல. முன்னாடி அவரைப் பத்தி சொன்ன விஷயங்களுக்கெல்லாம் அப்படியே இப்ப ரிவர்ஸ்ல போயிட்டு இருக்கார் சிம்பு.
எடுத்தவரை படத்தை போட்டு பார்த்தோம். இது தியேட்டர் கன்டன்ட்டா வந்திருக்கு. என்னை நம்பி சிம்பு வந்தார். அவருக்கு நானும் கைமாறு பண்ணவேன். அவரோட வேல்யூ தெரியும். அதனால, நூறு சதவிகிதம் தியேட்டர் ரிலீஸ்தான் பண்றோம். படம் முடிஞ்சு, இப்ப டப்பிங் போயிட்டு இருக்கு. இன்னும் ரெண்டு நாள் ஷூட் பேலன்ஸ் இருக்கு. தீபாவளிக்கு திட்டமிடுறோம்'' என்றார் சுரேஷ் காமாட்சி.