உறுதியானது அந்நியன் ஹிந்தி ரீமேக்!

அந்நியன் இந்தி தயாரிப்பை உறுதி செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
இயக்குனர் ஷங்கரின் படைப்பான அந்நியன் வெளியாகி 16 ஆண்டுகள் ஆகின்றன. பெறும் வெற்றி வெற்ற இப்படத்தின் ஹிந்தி பதிப்பை ரன்வீர் சிங் நடிக்க இயக்குனர் ஷங்கர் இயக்குவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளிவந்தது.
இந்நிலையில் அந்நியனின் தயாரிப்பாளரான ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் படத்தின் ஹிந்தி ரீமேக் கதை உரிமை தங்களிடமே இருப்பதாக தெரிவித்தது. அதற்கு ஷங்கரும் பதில் கொடுத்து கதையின் உரிமை தனக்குத்தான் சொந்தம் என்றார்.
இதனை தொடர்ந்து படத்தை ஹிந்தியில் தயாரிக்க உள்ள பென் இந்தியா நிறுவனம் அவர்களது அடுத்தடுத்த தயாரிப்புகளைப் பற்றிய மொத்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது. அதில் 'அந்நியன்' ஹிந்தி ரீமேக்கும் இடம் பெற்றுள்ளது. இதனால் அந்நியன் ஹிந்தி ரீமேக் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.