வித்தியாசமான கதாபாத்திரத்தில் 'புஷ்பா'வில் தோன்றும் ராஷ்மிகா!
By : Mohan Raj
அல்லு அர்ஜுனுடன் கதாநாயகியாக நடித்து வரும் புஷ்பா படம் பற்றி முதன் முறையாக மனம் திறந்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
தற்பொதைய சூழலில் தென்னிந்தியாவின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தற்பொழுது அல்லு அர்ஜுனுடன் 'புஷ்பா' படத்தில் நடித்து வருகிறார். செம்மரக் கடத்தல் கும்பல் பற்றி கதையம்சம் உடைய படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது 'புஷ்பா'.
இந்தபடத்தில் தான் நடிக்கும் வேடம் குறித்து இதுவரை தகவல் வெளியிடாமல் இருந்து நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது ஒரு பேட்டியில் அது குறித்து கூறியிருக்கிறார்.
அவர் கூறுகையில், "புஷ்பா படத்தில் ஒரு அதிரடியான வேடத்தில் நடித்துள்ளேன். படத்தில் எனது கதாபாத்திரமும் அது ஏற்படுத்தும் திருப்பமும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும். கிராமத்து பெண்ணாக நடித்துள்ள எனக்கு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தை கொடுத்திருக்கிறார்கள். அதனால் தெலுங்கு ரசிகர்கள் இதுவரை பார்த்த ராஷ்மிகாவில் இருந்து வித்தியாணமான மாறுபட்ட ராஷ்மிகா'வை காண போகிறார்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.