மீண்டும் துவங்க இருக்கும் படப்பிடிப்புகள் - திரையுலகினர் 'குஷி'!

சினிமா, சின்னத்திரை தொடர்கள் படப்பிடிப்பு நடத்த வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனோ இரண்டாம் அலை காரணமாக கடந்த இரண்டு மாத காலமகா தமிழகம் ஊரடங்கின் விதிகளின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதனால் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு அனைத்தும் கொரோனோ பரவலை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜுன் 28-ஆம் தேதிக்கான ஊரடங்கு தளர்வுகளில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த அனுமதிக்கப்படும். படப்பிடிப்பில் பங்கேற்கும் பணியார்கள்/கலைஞர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும். படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் அனுமதிக்கப்படும்.
இதன் மூலம் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் பழையபடி பரபரப்பாக ஆரம்பமாக உள்ளது, இதனால் மீண்டும் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.