லிங்குசாமி மீது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புகார்!

லிங்குசாமி மீது புகார் அளித்துள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.
இயக்குனர் லிங்குசாமி விஷால் நடித்த சண்டக்கோழி 2 படத்தை அடுத்து தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்னேனியை வைத்து ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் லிங்குசாமி. இந்த நேரத்தில் தங்களிடம் ஏற்கனவே போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி தங்களுக்கு ஒரு படத்தை இயக்கி தந்த பிறகுதான் வேறு படத்தை லிங்குசாமி இயக்க வேண்டும் என்று ஸ்டுடியோ கிரீன் ஞான வேல்ராஜா சேம்பரில் புகார் அளித்துள்ளார்.
இதன் பின்னணியாவது, கமல் நடித்த உத்தமவில்லன் படத்தை எடுத்தபோது லிங்குசாமிக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டபோது அவருக்கு பண உதவி செய்தாராம் ஞானவேல்ராஜா. ஆனால் அந்த படம் சரியாக போகாததால் அவரிடத்தில் வாங்கிய பணத்தை லிங்குசாமியினால் திருப்பி தர இயலவில்லை.
அதனால் தன்னிடம் வாங்கிய பணத்திற்கு தனது நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்கித் தருமாறு அப்போது கூறியிருக்கிறார் ஞானவேல்ராஜா, இது தொடர்பாக தனது படத்தை முடிக்காமல் தெலுங்கு படத்தை துவங்க கூடாது என புகார் அளித்துள்ளார்.