Kathir News
Begin typing your search above and press return to search.

எனது டைட்டிலை திருடிவிட்டு நண்பர்கள் மூலம் மிரட்டுகிறார் விஷால் - உதவி இயக்குனர் புகார்

எனது டைட்டிலை திருடிவிட்டு நண்பர்கள் மூலம் மிரட்டுகிறார் விஷால் - உதவி இயக்குனர் புகார்
X

Mohan RajBy : Mohan Raj

  |  1 July 2021 1:30 AM GMT

சினிமா பட டைட்டிலை திருடியதாக நடிகர் விஷால் மீது புகார் எழுந்துள்ளது.

உதவி இயக்குனர் விஜய் ஆனந்த் நடிகர் விஷால் மீது சினிமாபட டைட்டில் திருட்டு குறித்து புகார் கூறியுள்ளார், இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "திரையுலகில் 15 ஆண்டுகளாக இணை இயக்குனராக உள்ளேன். விஷால் உடன் சக்ரா படத்தில் பணியாற்றிய போது, நான் உருவாக்கிய காமன் மேன் படத்தின் கதையை கூறினேன். நான் பதிவு செய்து வைத்திருந்த காமன் மேன் தலைப்பை விஷால் அபகரிக்க நினைக்கிறார்.





இத்தனைக்கும் நான் டைட்டில் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் எனக்கூறிய நிலையில் மவுனமாக இருந்து விட்டு இன்று அவரது படத்திற்கு ‛நாட் எ காமன் மேன்' என்ற பெயரை சப்டைட்டிலாக வைத்துள்ளார். இதுகுறித்து கேட்ட போது விஷால் தரப்பில் பதில் இல்லை. ஆனால், மறைமுகமாக அவரது நண்பர்கள் மூலம் மிரட்டல் விடுக்கின்றனர்" என புகார் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News