"சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒரு புகைப்படம் எடுக்கனும்" - நடிகர் ஜோஜு ஜார்ஜ்!
By : Mohan Raj
"சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்" என மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் சமீபத்தில் வெளியான படம் 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்த மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் கவனம் ஈர்த்தார். இவரின் `துரோகம் நம் இனத்தின் சாபம்' என்ற டயலாக் ரசிகர்களிடையே நல்ல ரீச் ஆனது. மேலும் மலையாளத்தில் இவர் பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
இவர் தற்பொழுது ஒரு தனியார் யூ ட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "தமிழ்நாட்டின் சென்னை மற்றும் மதுரை போன்ற நகரங்களிலிருந்து என்னை வாழ்த்தி செய்திகள் அனுப்புகின்றனர். எனக்கு கிடைத்த பெரும்பாலான வாழ்த்துக்கள், இலங்கை மற்றும் மலேசியா போன்று இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்தவை இதனால் எனக்கு மகிழ்ச்சி.
ஒருநாள் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் பேசிக்கொண்டிருக்கும்போது தான் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் படத்தைப் பார்த்ததாகவும், அவர் என்னைப் பற்றி பேசியதாகவும் கூறினார், சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்தபோது, வாய்ப்பு தேடி அலைந்தபோது நான் மிகப்பெரிய அதிசயமாக பார்த்தது ரஜினி சார், மம்மூட்டி சார் போன்றோர்கள்தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையை கார்த்திக் சுப்பராஜிடம் சொன்னேன்" என்றார் அவர்.