இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்த அமீர் கான்!

இரண்டாவது மனைவி கிரண் ராவை அமீர் கான் விவாகரத்து செய்துள்ளார்.
ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர் கான். இவர் ரீனா தத்தை முதலில் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஐரா கான், ஜூனைத் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
பின்னர் 2005-ஆம் ஆண்டு கிரண் ராவை அமீர் கான் திருமணம் செய்துக் கொண்டார். மேலும், இத்தம்பதிக்கு வாடகைத்தாய் மூலம் பிறந்த ஒரு மகனும் இருக்கிறார். இந்நிலையில் இந்த ஜோடி தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "15 ஆண்டுகாலம் மகிழ்ச்சியான தம்பதியாக வாழ்ந்தோம். ஆனால் நாங்கள் இருவருமே தனித்தனியாக புதிய வாழ்க்கைக்குள் நுழைகிறோம். இனி நாங்கள் கணவன் மனைவி அல்ல. பெற்றோர் மட்டுமே... இந்த முடிவை சில காலத்துக்கு முன்பே எடுத்துவிட்டோம். ஆனால் சில நடைமுறைகளால் அறிவிக்க தாமதம் ஆனது" என அறிவித்துள்ளனர்.