Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரே சமயத்தில் சீதையாகவும், திரௌபதையாகவும் நடிக்க பெரும் வாய்ப்பு பெற்ற நடிகை!

ஒரே சமயத்தில் சீதையாகவும், திரௌபதையாகவும் நடிக்க பெரும் வாய்ப்பு பெற்ற நடிகை!
X

Mohan RajBy : Mohan Raj

  |  6 July 2021 8:00 AM IST

இதுவரை எந்த ஒரு நடிகையும் நடிக்காத, வாய்ப்பு கிடைக்காத கதாபாத்திரங்களில் நடிகை தீபிகா படுகோனே நடிக்க இருக்கிறார்.


2 வருடங்களுக்கு முன்பே மகாபாரதம் கதையை படமாக்கும் அறிவிப்பு வந்தது. ஆனால் அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லாததால் படத்தை கைவிட்டுவிட்டதாக பேச்சு கிளம்பியது. இதற்கிடையே இந்த படத்தை தயாரிக்கும் மது மந்தனா தற்போது அளித்துள்ள பேட்டியில், "மகாபாரதம் கதையை படமாக்கும் நேரம் வந்து விட்டது. இந்த படத்தின் கதை தீபிகா படுகோனேவுக்கு பிடித்துபோனதால் திரவுபதியாக நடிக்க முன்வந்துள்ளார்" என கூறியுள்ளார்.


மேலும் ராமாயணம் படத்திலும் சீதையாக நடிக்க தீபிகா படுகோனேவை தேர்வு செய்துள்ளனர் என ராமாயணம் படக்குழு அறிவித்துள்ளது. சீதையாகவும், திரவுபதியாகவும் நடிக்கும் பெருமை தீபிகா படுகோனேவுக்கு கிடைத்துள்ளது. இதுவரை எந்த நடிகையும் 2 கதாபாத்திரங்களிலும் இதுவரை நடிக்கவில்லை, இதுவே முதல்முறை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News