"டேய் சாவடிச்சுடுவேன்" என ரசிகரை மிரட்டிய 'கூத்தாடி' சித்தார்த்!

அதிகப்பிரசங்கி தனமாக ரசிகரை சாவடிச்சுடுவேன் என மிரட்டிய கூத்தாடி சித்தார்த்.
கூத்தாடி சித்தார்த் பட வாய்ப்புகள் இல்லை என்ற காரணத்தினால் சமூக வலைதளத்தில் முழு நேரமும் முழு மூச்சாக இயங்கி வருகிறார். அவ்வபோது தன் இருப்பை காண்பிக்க ஏதாவது ட்விட் செய்து கொண்டே இருப்பார். மேலும் தனக்கு அந்த விஷயம் பற்றி தெரியாவிட்டாலும் அந்த துறையின் மேதை அளவிற்கு விவாதம் செய்து பதிவுகள் இடுவார். இந்த நிலையில் ரசிகர் ஒருவரை "சாவடிச்சுடுவேன்" என மிரட்டிய ட்விட் வைரலாகியுள்ளது.
கூத்தாடி சித்தார்த் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு செய்திருந்தார். மேலும் அந்த பதிவோடு திலிப் குமாரின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இந்த பதிவைப் பார்த்த ரசிகர் ஒருவர் புகைப்படத்தில் இருப்பவரை பார்க்கும்போது அக்ஷய்குமார் மாதிரியே இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான சித்தார்த் "டேய் சாவடிச்சிடுவேன் ஓடிடு" என அதிகப்பிரசங்கி தனமாக பதில் அளித்துள்ளார். இவர் நடிப்பு என்ற பெயரில் மக்களை "சாவடிப்பது" போதாது என்று ட்விட்டரிலும் "சாவடிப்பேன்" என மிரட்டுவது பரபரப்பாகியுள்ளது.