Kathir News
Begin typing your search above and press return to search.

தென்னிந்திய அளவில் புதிய சாதனை படைத்த 'ரவுடி பேபி' பாடல்!

தென்னிந்திய அளவில் புதிய சாதனை படைத்த ரவுடி பேபி பாடல்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  9 July 2021 1:45 PM IST

'ரவுடி பேபி' பாடல் தென்னிந்திய அளவில் புதிய சாதனை படைத்துள்ளது.


இசையமைப்பாளர் 'யுவன் சங்கர் ராஜா' இசையில் தனுஷ், சாய்பல்லவி, நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'மாரி 2'. இதில் தனுஷ் எழுதி பாடி இருந்த 'ரவுடி பேபி' பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.

இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. 'யூடியூப்'பில் வெளியிடப்பட்ட ரவுடி பேபி பாடலின் வீடியோ தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்த வண்ணம் உள்ளது.


மேலும் 'ரவுடி பேபி' பாடல் வீடியோ யூடியூபில் 5 மில்லியன் லைக்குகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. தென்னிந்திய அளவில் வெளியான பாடல்களில் 5 மில்லியன் லைக்குகளை பெற்ற முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடல் யூடியூபில் இதுவரை 118 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News