வெளியானது நவரசங்கள் அடங்கிய 'நவரசா' டீசர்!

கொரோனாவால் ஊரடங்கால் வருமானம் இழந்து பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் 'நவரசா' என்கிற ஆந்தாலஜி தொடர் உருவாகி உள்ளது.
இயக்குனர் மணிரத்னம், ஜெயேந்திராவுடன் இணைந்து 'நவரசா' என்கிற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்துள்ளார். நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த வெப் தொடரை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், வஸந்த் சாய், கவுதம் மேனன், பிஜாய் நம்பியார், பிரியதர்ஷன், அரவிந்த்சாமி உள்பட 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர்.
கொரோனோ ஊரடங்கால் வருமானம் இழந்து தவிக்கும் திரையுலக தொழிலாளர்களுக்காக நிதி திரட்டும் நோக்கில் இந்த வெப் தொடர் உருவாகி உள்ளது. இதில் சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, சித்தார்த், பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன், அதர்வா, நித்யா மேனன், பார்வதி, ரம்யா நம்பீசன், பிரசன்னா, அதிதி பாலன், ரித்விகா உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இதன் டீசர் தற்பொழுது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் வெளியீடு வருகிற ஆகஸ்ட் 6-ந் தேதி நேரடியாக 'நெட்பிளிக்ஸ்' ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.