சோனு சூட் சினிமாவில் அடிவாங்கியதை உண்மை என நம்பி டி.வியை உடைத்த சிறுவன்!

சோனு சூட் அடிவாங்குவதை உண்மை என நம்பி தொலைக்காட்சி பெட்டியை உடைத்த சிறுவனால் பரபரப்பு.
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்தை சேர்ந்தவர் குருவையா. இவரது 7 வயது மகன் விராட், நடிகர் சோனு சூட்டின் தீவிர ரசிகன். அந்த சிறுவன் சோனு சூட் நடித்த 'துக்குடு' என்ற தெலுங்கு படத்தை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
துக்குடு' படத்தில் ஹீரோ மகேஷ் பாபு, வில்லன் சோனு சூட்டை அடித்து துவம்சம் செய்வது போன்று ஒரு சண்டைக் காட்சி இடம்பெற்றிருக்கும். தனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் அடிவாங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாத விராட், மகேஷ் பாபு மீதான ஆத்திரத்தில் தொலைக்காட்சி பெட்டி மீது கல்லை எறிந்துள்ளான். பின்னர் வீட்டில் அனைவரும் வந்து பார்க்கும் போது சோனு சூட் அடிவாங்குவதை பார்க்க முடியாமல் சிறுவன் தொலைக்காட்சி பெட்டியை உடைத்தது தெரிய வந்தது.
பின்னர் "இதுபோன்று செய்யகூடாது, டி.வியை உடைத்தால் உன் தந்தை என்னிடம் தான் டிவியை வாங்கி தர சொல்வார்" என சிறுவனுக்கு சோனு சூட் அறிவுரை கூறியுள்ளார்.