மோகன்லால் நடிப்பில் ப்ருத்விராஜ் இயக்கும் 'ப்ரோ டாடி' படப்பிடிப்பு ஆரம்பம்!

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகும் 'ப்ரோ டாடி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
நடிகராக இருந்து இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரிந்து வரும் படம் 'ப்ரோ டாடி'.
பிருத்விராஜ் இயக்கத்தில் உருவாகும் 2-வது படமாக இது அமைந்துள்ளது. காமெடி கலந்த குடும்பப் பின்னணி கொண்ட கதையாக உருவாகும் இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு நேற்று (ஜூலை 15) முதல் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முதலில் கேரளாவில்தான் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால், கொரோனோ அச்சுறுத்தலால் காரணமாக ஹைதராபத்தில் துவங்கப்பட்டுளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.