"கமலுக்கு இயக்குனராக ஆக்ஷன் சொன்னது என் கனவு" - லோகேஷ் கனகராஜின் பூரிப்பு!

By : Mohan Raj
"உங்களுக்கு 'ஆக்ஷன்' என்ற வார்த்தையைச் சொல்வது எனக்கு கனவு சார்" என கமல்ஹாசன் அவர்களுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாஸில் ஆகியோர் நடிக்கும் படம் 'விக்ரம்', ராஜ்கமல் ப்லிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு தினங்களுக்கு முன் துவங்கியது.
இதனைதொடர்ந்து படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு பற்றி கமல்ஹாசன், "விக்ரம் படத்தின் முதல் நாள். ஒரு ஹைஸ்கூல் ரியூனியன் போல இருக்கிறது. கடந்த 50 வருடங்களில் படப்பிடிப்பிலிருந்து விலகியிருப்பது இதுவே முதல் முறை. சினிமா படைப்பாளிகள் பலர் கடந்த ஒரு வருடமாக ஆக்ஷனையே பார்க்கவில்லை.
எனது அனைத்து தோழர்களையும், அணியினரையும், ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனலில் பணிபுரிவதை வரவேற்கிறேன். குறிப்பாக மிஸ்டர் லோகேஷ் மற்றும் அவரது உற்சாகமான குழுவினர், மற்றும் திறமைசாலிகளான சகோதரர்கள் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரையும் வரவேற்கிறேன்," எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த லோகேஷ், "உங்களுக்கு 'ஆக்ஷன்' என்ற வார்த்தையைச் சொல்வது எனக்கு கனவு சார். இந்த ஞாபகத்தை அப்படியே பாதுகாத்து வைத்துக் கொள்வேன். நன்றி, அதிகமான அன்பு உங்கள் மீது சார்," என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்
