கொண்டாட்டத்தில் ரசிகர்கள் : ட்விட்டரில் ஒருகோடி பேர் பின்தொடரும் முதல் தமிழ் நடிகர்!

தமிழ் சினிமாவின் கதாநாயகர்களில் ஒரு கோடி பின்தொடர்பாளர்களை பெற்ற முதல் நடிகர் என்ற பெருமையை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் சுமார் பையனாக அறிமுகமான தனுஷ் தற்பொழுது அடைந்திருக்கும் உயரம் அளப்பறியது. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரையுலகம் தாண்டி ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார் நடிகர் தனுஷ்.
இவர் தற்பொழுது சமூக வலைதளத்தில் புதிய உயரம் தொட்டுள்ளார், இந்த உயரத்தை அடைந்த முதல் தமிழ் சினிமா நடிகர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
தற்போது தனுஷ், தமிழ் சினிமாவில் ட்விட்டரில் 10 மில்லியன் ஃபாலோவர்சை கொண்ட பிரபலம் என்கிற சாதனையை படைத்துள்ளார். இந்த தகவலை தனுஷின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இவரை தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் கமல் 68 லட்சம் ஃபாலோவர்ஸ்சுடன் இரண்டாவது இடத்திலும், 59 லட்சம் ஃபாலோவர்ஸ்சுடன் ரஜினிகாந்த் 3 ஆவது இடத்திலும், 32 லட்சம் ஃபாலோவார் வைத்திருக்கும் விஜய் 4 ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.