Kathir News
Begin typing your search above and press return to search.

"தியாகராஜா சுவாமிகள் தம்புரா எங்கே; முத்துசாமி தீட்சிதரின் வீணை எங்கே?" இசைஞானியின் ஆதங்கம்!

தியாகராஜா சுவாமிகள் தம்புரா எங்கே; முத்துசாமி தீட்சிதரின் வீணை எங்கே?  இசைஞானியின் ஆதங்கம்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  23 July 2021 12:30 PM IST

"தியாகராஜா சுவாமிகள் தம்புரா எங்கே; முத்துசாமி தீட்சிதரின் வீணை எங்கே?" என ஆதங்கப்பட்டுள்ளார் இசைஞானி இளையராஜா.

அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறும் போது, "ஒரு பாடல் என்பது இன்று பூத்த மலர் போல இருக்க வேண்டும். பூத்த மலர் ஓரிரு நாளில் உதிர்ந்து விடும். ஆனால், பாடல் என்பது எப்போதும் மலராக, இளமையாக இருக்கும்.

என் பழைய பாடல்கள் இப்போது கேட்டாலும் புதுசாகவே இருக்கும். என் இசைப்பணி எப்போதும் போல, தொடர்ந்து கொண்டு இருக்கிறது. வெளிநாட்டில், பீத்தோவன் வாசித்த பியோனோ போன்ற வாத்திய கருவிகள் மற்றும் வீடு போன்றவற்றை அப்படியே பாதுகாத்து, பராமரிக்கின்றனர். இங்கு நம் இசைமேதைகளின் இசைக்கருவிகளை பாதுகாத்து வைத்துள்ளோமா; தியாகராஜா சுவாமிகள் தம்புரா எங்கே; முத்துசாமி தீட்சிதரின் வீணை எங்கே...??

இதுகுறித்து, மறைந்த முதல்வர் கருணாநிதி இருந்தபோது, விழா ஒன்றில் பேசியுள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருந்தார். நமக்கு அதன் மதிப்பு, மகத்துவம் தெரியவில்லை. பாரம்பரியத்தை பாதுகாப்பது போன்றதொரு விஷயத்தை செய்ய வேண்டும். என் இசையில் நான் பாடவேண்டும். வரும் தலைமுறை பின்பற்றும்படி, நான் நடந்து வருகிறேன். இசை மேதைகளுக்கு இங்கு சிலை வைக்கவில்லை என்பதை பார்க்கும் போது, நம் உணர்வு அப்படி இருக்கிறது அவ்வளவுதான்.

1000 படங்களை கடந்தாலும் இன்னும் புதுமையான விஷயம் போய்க்கொண்டு தான் இருக்கிறது. இன்னும் இசையமைத்துக்கொண்டு தான் இருக்கிறேன். கொரோனா காரணமாக சினிமாவே டல்லாகத் தான் இருக்கிறது. விரைவில் நிலைமை மாறும்" என அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News