ராஜமௌலி - மகேஷ்பாபு கூட்டணி பற்றிய சுவாரஸ்ய தகவல்!

By : Mohan Raj
ராஜமவுலி, மகேஷ் பாபு இணைய உள்ள படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் தான் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் வெற்றி இயக்குனர் ராஜமவுலி தற்போது 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறார். இதனையடுத்து அவர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை அவர் இயக்கப் போகிறார். இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலியின் அப்பா கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் மகேஷ்பாபு படம் பற்றிய தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "ராஜமவுலி, மகேஷ் பாபு இணைய உள்ள படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் தான் நடக்க உள்ளதாகவும், அதற்கான தரவுகளை சேகரிப்பதற்காக பிரபல தென்னாப்பிரிக்க எழுத்தாளரான வில்பர் ஸ்மித் எழுதிய நாவல்களைப் படித்து கதையை வடிவமைத்து வருவதாகவும்" தெரிவித்துள்ளார்.
