விக்ரம் பிரபுவுக்கு வெற்றி தேடித்தரப்போகும் 'டாணாக்காரன்'!

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகவிருக்கும் 'டாணாக்காரன்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகு பெரும் வரவேற்பை பெற்றது.
கும்கி படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு ஏராளமான படங்களில் நடித்து விட்டார். ஆனால் சில படங்கள் மட்டுமே அவரின் வெற்றிப்பட பட்டியலில் இணைந்தனர். இந்த நிலையில் வெற்றிமாறனிடம் விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய தமிழ் இயக்கத்தில் 'டாணாக்காரன்' படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது, விக்ரம் பிரபுவுக்கு நாயகியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான டீசர் பெரும் வரவேற்பை பெற்றதுடன் யூட்யூப்பிலும் முதலிடத்தை பிடித்தது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீடு பற்றி எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில் இது கண்டிப்பாக விக்ரம் பிரபுவுக்கு வெற்றியை தரும் என நம்புகின்றனர்.