Kathir News
Begin typing your search above and press return to search.

நடிப்புக்கு முழுக்கு போடும் உதயநிதி - தாங்க முடியாத சோகத்தில் ரசிகர்கள்??

நடிப்புக்கு முழுக்கு போடும் உதயநிதி - தாங்க முடியாத சோகத்தில் ரசிகர்கள்??
X

Mohan RajBy : Mohan Raj

  |  25 July 2021 3:15 PM IST

தமிழக முதல்வரின் மகனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்ஏ-வுமாகிய உதயநிதி சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகப் போவதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எம்.எல்.ஏ உதயநிதி தற்பொழுது மூன்று படங்களில் நடித்து வருகிறார். அதில் தற்பொழுது இயக்குனர் மகிழ் திருமேணி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு 'கனா' பட இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும், 'ஆர்டிக்கிள் 15' என்ற படத்திலும் இதையடுத்து, இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க உள்ளார் உதயநிதி.

இப்படங்களை முடித்த பிறகு முழு நேர அரசியல் வருகைக்கு தயாராக சொல்லி குடும்பத்தினர் கூறி வருவதால் அத்துடன் நடிப்பை முழுக்கு போடவிருப்பதாக உதயநிதி வட்டாரம் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக உதயநிதி இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே நடிக்க உள்ளதால் இனி உதயநிதியின் நடிப்பை பார்க்க இயலாத என ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News